dinamalar telegram
Advertisement

தேனியில் கொட்டிய கனமழைக்கு கண்மாய், ரோடு, நிலங்கள் சேதம்

Share
தேனி : தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு தேசிய நெடுஞ்சசாலைகள், விளை நிலங்களில் வெள்ளம் சூழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
85 வீடுகள் இடிந்து விழுந்தன.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை அதிகபட்சமாக வீரபாண்டியில் 128 மி.மீ., போடியில் 98.2 மி.மீ., உத்தமபாளையத்தில் 93 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 80.2 மி.மீ., ஆண்டிபட்டியில் 64 மி.மீ., கூடலுாரில் 61.7 மி.மீ., என மழை கொட்டியது. ஒரு மாதமாக மாவட்டத்தில் மழை பெய்தாலும் பெரிய அளவில் நீர் தேங்கி மக்களுக்கு சிரமம் ஏற்படுத்த வில்லை.

ஆனால் நேற்று முன்தினம் பெய்த மழை பல இடங்களில் வாய்கால் உடைத்து, விளை நிலங்களில் வெள்ளம் புகுந்தது.சேத விபரம் தாலுகா வாரியாக தேனியில் 11, போடி 17, ஆண்டிபட்டி 15, உத்தமபாளையம் 42 என 85 வீடுகள் சேதமடைந்தன. உத்தமபாளையத்தில் கென்னடி, முத்தையன்செட்டியில் அமராவதி காயமடைந்தனர். 46 எக்டேர் வேளாண் பயிர்களும், 7 ஏக்கர் தோட்டக்கலை பயிர்களும் நீரில் மூழ்கின.உப்பார்பட்டியில் குருமூர்த்தி 58யின் 14 ஏக்கர் தென்னை, வாழை பயிர்கள் நீரில் மூழ்கியதும் அடங்கும்.வீரபாண்டி முல்லையாற்றில் அதிக நீர் வந்ததால் பரிகார மண்டபத்தை வெள்ளம் சூழ்ந்தது.


கூழையனுார் ஓடையில் வந்த காட்டாற்று வெள்ளம் தேனி-குச்சனுார் ரோட்டில் கரைபுரண்டு ஓடியது.பள்ளிக்கு விடுமுறை* சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் மழையால் ஆரம்பப்பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கியது. உயர்நிலைப் பள்ளி வளாகத்திலும் மழை நீர் தேங்கி உள்ளது. மழைநீர் தேங்கியதால் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.* போடி சுந்தரராஜபுரம், மேலச்சொக்கநாதபுரம்,

அம்மாபட்டியில் பெய்த கனமழையால் வெள்ளம் நிலங்களுக்குள் புகுந்ததால் வெண்டை, பாகற்காய், மிளகாய் செடிகள் நீரில் மூழ்கின. விளைந்த காய்கறிகளை பறிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்தனர். ரெங்கநாதபுரம் நாட்டாண்மைகாரர் குளம் நிரம்பி கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. கீழச்சொக்கநாதபுரம் குள்ளிகவுண்டர் கண்மாய் உடைந்த ஊருக்குள் புகுந்தது. வெள்ளம் வீடுகளுக்குள் சென்றது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமம் அடைந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement