dinamalar telegram
Advertisement

அஜாக்கிரதை ,சாக்கடை,மழை நீர் வரும் வடிகால்களில் பாட்டில்கள் வீச்சு

Share
டாஸ்மாக் மதுபான கடைகளில் தற்போது பார்கள் இயங்கவில்லை. இதனால் மதுப்பாட்டில்களை வாங்கிக்கொண்டு வயல்காடு ,தோட்டம் , ஓடைகரைகள், நகர் பகுதிகளில் பூட்டியுள்ள கடைகளில் முன்பு உட்கார்ந்து மது குடிக்கின்றனர்.

காலியான மதுபாட்டில்களை அதற்குரிய குப்பை தொட்டியில் போடாமல் அருகில் உள்ள மழைநீர் வடிகால் ,சாக்கடை,மழை நீர் வரும் வடிகால்களில் வீசிவிட்டு செல்கின்றனர்.இவ்வாறு வீசப்படும் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் மழை நீரில் அடித்துச் சென்று ஓரிடத்தில் சேர்த்து விடுகின்றன .

இதிலும் சில ஒடையில் உள்ள குழாய்களில் சிக்கி கொள்கின்றன. இதனால் மழை நீர் செல்வதில் தடை ஏற்படுவதோடு குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்து விட காரணமாகிறது. இதன் குப்பையை துாய்மை பணியாளர்கள் தங்கள் கைகளால் அகற்ற வேண்டிய நிலை உள்ளது. முறையான கையுறை காலுறை இல்லாத நேரத்தில் காலி மதுபாட்டில்கள் பணியாளர்களின் கை , கால்களை பதம் பார்க்கின்றன

. ஊராட்சி , நகராட்சி பகுதிகளில் போதுமான பணியாளர்கள் இல்லாத நிலையில் பேரிடர் காலங்களில் தொழிலாளர் காயமடைவதால் ஆள் பற்றாக்குறை ஏற்படுகிறது. மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை வீசுவோரை கண்டறிந்து அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement