dinamalar telegram
Advertisement

மழை நீரால் நிரம்பிய ஸ்ரீவி., திருமுக்குளம்

Share
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் திருமுக்குளம் சிதைந்து பல ஆண்டுகளாக தண்ணீர் தேக்காத நிலையில், தற்போதைய மழையால் குளத்திற்கு தண்ணீர் வரத்து ஏற்பட குளம் நிறைந்தது.

ஆண்டாள் நீராடும் புனிதமிக்க குளமான திருமுக்குளத்தின் வடக்கு பக்க சுவர் சிதைந்து தண்ணீர் தேங்காமல் இருந்தது. குளத்தை சீரமைத்து தண்ணீரை தேக்க ஸ்ரீவி.,பொதுமக்கள் கோரினர். சீரமைப்பதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்தனர். இது பக்தர்களின் மனதை புண்படுத்தி வந்தது.இந்நிலையில் தொடர் மழையால் தண்ணீர் வரத்து ஏற்பட்டு திருமுக்குளம் நிரம்பி வருகிறது.

குளத்தில் தண்ணீர் தேங்குவதால் ஏற்படும் கரை உடைப்பை தடுக்க 300 எம் சாண்ட் மூடைகளை அடுக்கி தற்காலிக தீர்வை கோயில் நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது.கோயில் செயல் அலுவலர் இளங்கோவன்: குளத்தை சீரமைப்பதில் நான்கு கட்ட ஆய்வுகள் முடிந்து சீரமைப்பு பணிக்காக மதிப்பீடு செய்யப்பட்டு துறை அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் குளம் சீரமைப்பு பணி துவங்கும், என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement