ADVERTISEMENT
முதுகுளத்துார் : உயிரிழந்த கல்லுாரி மாணவர் மணிகண்டனுக்கு நீதி கேட்டு முதுகுளத்துாரில் பா.ஜ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நீர்க்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்த லட்சுமணகுமார் மகன் மணிகண்டன் 21, கடந்த டிச.4 தேதி போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற பின்பு வீட்டில் நள்ளிரவு 1:00 மணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். போலீசார் தாக்கியதில்தான் மணிகண்டன் உயிரிழந்தாக கூறி உறவினர்கள்

டிச.,5ம் தேதி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மணிகண்டனுக்கு ஆதரவாக முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டில் பா.ஜ. சார்பில் மாநில இளைஞரணி பொதுச்செயலாளர்ஆத்மா கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மணிகண்டன் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் சண்முகராஜா உட்பட ஒன்றிய தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!