dinamalar telegram
Advertisement

பரமக்குடி வைகையில் பெண்கள் ஆரத்தி வழிபாடு

Share
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப்பெருமாள் கோயில் படித்துறையில் பெண்கள்ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.நதியை பெண் கடவுளாக பாவித்து வழிபடுவது வழக்கம்.


அந்த வகையில் கங்கையில் ஆரத்தி தொடர்ந்து நடத்தப்படுவதுடன், காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பதினெட்டாம் பெருக்கில் ஆரத்தி விழா நடக்கிறது.பரமக்குடி வைகை ஆற்றில் தண்ணீர் வரும் நேரங்களில் ஆரத்தி எடுப்பது வழக்கம். தற்போது 10 நாட்களாக ஆற்றில் தண்ணீர் செல்லும் நிலையில், அப்பகுதியில் பெண்கள்ஆரத்தி எடுத்து விளக்கை ஆற்றில் மிதக்க விட்டனர்.


அர்ச்சகர்கள் வேத மந்திரம் கூறி வைகைக்கு தீப ஆரத்தி காண்பித்தனர்.மக்கள் நோய் நொடியிலிருந்து பாதுகாப்பாக வாழவும், நதியின் துாய்மையை வலியுறுத்தியும் மற்றும் ஆண்டுதோறும் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து அனைத்து வகையான பஞ்சங்கள் நீங்க வேண்டும் என்று வழிபட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement