dinamalar telegram
Advertisement

மோசடி செய்த பட்டதாரி பெண் கைது

Share
சென்னை : திருவான்மியூரைச் சேர்ந்தவர் பப்பியான் பிரபாகர். இவருக்கு மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த அமுதா, 39, அறிமுகமானார்.

'பி.டெக்' படித்து, பிரபல பங்கு வர்த்தக நிறுவனத்தில் வேலை செய்வதாக அமுதா கூறியுள்ளார்.மேலும் பப்பியான் பிரபாகர் அவரது நண்பர்களிடம் தான் தெரிவிக்கும் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.

பப்பியான் பிரபாகர் உள்ளிட்ட 23 பேரிடம் ரூ.87.25 லட்சம் மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட நபர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து சொந்த ஊரில் பதுங்கி இருந்த அமுதாவை நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement