dinamalar telegram
Advertisement

தேங்கிய கழிவு நீரில் வசிப்பு தினமும் கொசுக்கடியால் தவிப்பு

Share
மேலுார் : மேலுார் நகராட்சி 17வது வார்டில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த வார்டில் கடலைக்காரத்தெரு, ஆறுமுகம் பிள்ளை, நொண்டிக்கோயில் தெரு, மெயின் ரோட்டின் ஒரு பகுதி உள்ளன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

மணவாளன்: பெண்களுக்கு இலவச கழிப்பறை கிடையாது. மேலுார் பகுதிகளின் மொத்த கழிவு நீர் பெரியாற்று கால்வாயில் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கடி வேறு. வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதில் அலட்சியம் காட்டும் நகராட்சி நிர்வாகம், வரி மட்டும் வசூலிக்கிறது.தியாகராஜன்: போதிய பராமரிப்பின்றி தண்ணீர் தொட்டி காட்சி பொருளாக உள்ளது. தினமும் குப்பை சேகரிக்க ஆட்கள் வராததால் தேங்கி கிடக்கிறது.தெரு விளக்குகள் பழுதால் இரவில் குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அடிப்படை வசதிகளை செய்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement