சிலவரி அரசியல்...
முன்னாள் ஆந்திர முதல்வர், முன்னாள் தமிழக கவர்னர் ரோசய்யா மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.- கமல், ம.நீ.ம., தலைவர்
விருதுநகரில் புதிதாக நடப்பட்ட மின்சார கம்பம் முறிந்து விழுந்ததில் அதில் வேலை செய்த தொழிலாளி காளிராஜ் உயிரிழந்திருப்பதும், இன்னொருவர் காயமடைந்ததும் வேதனையளிக்கிறது. இது எளிதில் கடந்து போகும் விஷயமல்ல. மின்கம்பிகளைப் பொருத்தி, இணைப்பு வழங்கப்பட்ட பின்னர் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் முறிந்து விழுந்தால் என்னவாகும் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.- அன்புமணி, பா.ம.க., இளைஞரணி தலைவர்

தமிழக முன்னாள் கவர்னர் ரோசைய்யா காலமான செய்திஅறிந்து வேதனை அடைந்தேன். எதிர்கட்சி தலைவராக நான் இருந்தபோது கவர்னராக இருந்த அவருடன் பழககூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பழகுவதற்கு இனிமையானவர். உயரிய பதவியில் இருந்தாலும் அனைவரிடம் அன்பாக பழகக்கூடியவர்.- விஜயகாந்த், தே.மு.தி.க., நிறுவனர்
மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் அணை பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவினை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.- சீமான், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் பள்ளிகல்லுாரிகளின் கட்டட உறுதித் தன்மையை ஆய்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!