இரண்டு வாரத்தில் வருமானம்: ரூ.20 கோடி
சபரிமலை:சபரிமலை சீசன் தொடங்கிய இரண்டு வாரத்தில் வருமானம் 20 கோடி ரூபாயை கடந்தது.சபரிமலையில் மண்டல காலம் நவ.,16ல் தொடங்கியது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆரம்பத்தில் பதிவு செய்த பக்தர்களில் குறைவான அளவினரே தரிசனத்துக்கு வந்தனர். தற்போது தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. டிச.,2ம் தேதி முன்பதிவு செய்த 28 ஆயிரத்து 743 பேரில் 22 ஆயிரத்து 487 பேர் தரிசனம் செய்தனர். மூன்றாம் தேதி 33 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.
தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.மண்டல சீசன் தொடங்கிய இரண்டு வாரங்களில் வருமானம் 20 கோடி ரூபாய் கடந்ததாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். பக்தர்கள் இ காணிக்கை செலுத்த வசதி செய்யப்பட்டிருந்தாலும் அதில் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வந்துள்ளது.
பக்தர்கள் குறைவு காரணமாகவும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லாததாலும் கடைகள் ஏலம் போவதில் தொடர்ந்து இழுபறி காணப்படுகிறது. நேற்று முன்தினம் நடந்த மறு ஏலத்தில் சன்னிதானம், பம்பை, நிலக்கல்லில் 16 கடைகள் மட்டுமே ஏலம் போயின.
ஆரம்பத்தில் பதிவு செய்த பக்தர்களில் குறைவான அளவினரே தரிசனத்துக்கு வந்தனர். தற்போது தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. டிச.,2ம் தேதி முன்பதிவு செய்த 28 ஆயிரத்து 743 பேரில் 22 ஆயிரத்து 487 பேர் தரிசனம் செய்தனர். மூன்றாம் தேதி 33 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் குறைவு காரணமாகவும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லாததாலும் கடைகள் ஏலம் போவதில் தொடர்ந்து இழுபறி காணப்படுகிறது. நேற்று முன்தினம் நடந்த மறு ஏலத்தில் சன்னிதானம், பம்பை, நிலக்கல்லில் 16 கடைகள் மட்டுமே ஏலம் போயின.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!