dinamalar telegram
Advertisement

தொடர் மழையால் அழுகிய வெங்காய பயிர்; கவலையில் விவசாயிகள்

Share
திருச்சுழி : திருச்சுழி அருகே பல கிராமங்களில் பயிரிடப்பட்ட வெங்காயம் தொடர் மழையில் அழுகியும், நோய் தாக்கியும் உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

திருச்சுழி அருகே சுத்தமடம், வடக்கு நத்தம், மறவர் பெருங்குடி, கொப்பு சித்தம்பட்டி, தொப்பலாக்கரை உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேல் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகளின் முக்கிய பயிர் வெங்காயம் தான். தொடர்ந்து பெய்த கனமழையால் பயிரிடப்பட்ட வெங்காயம் விளைச்சல் இல்லாமல் அழுகியும், நோய் தாக்குதல் ஏற்பட்டும் உள்ளது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இது குறித்து சுத்தமடத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், "வெங்காயம் அழுகியதால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். இழப்பீடு வழங்க வேண்டும். 2019ல் வெங்காய பயிருக்கு பயிர் காப்பீடு செயததற்கே பணம் வரவில்லை. அரசு தான் எங்களை காப்பாற்ற வேண்டும்." என்றனர்.

தோட்டக்கலை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன்: மேட்டுப்பாத்தி, பயிர் சுழற்சி முறை குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கு ஜனவரி வரை வெங்காய பயிருக்கு காப்பீடு கட்டணம் செலுத்தலாம். காப்பீட்டு தொகை செலுத்தி வராதவர்களுக்கு விரைவில் வரவு வைக்கப்படும், என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement