dinamalar telegram
Advertisement

பள்ளி நூலகத்தில் திருப்பூர் குமரன் நாடக நூல்: முதன்மை கல்வி அலுவலர் பரிந்துரை

Share
திருப்பூர்:திருப்பூரில் உள்ள அனைத்து பள்ளி நுாலகங்களிலும், 'திரும்பிப்பார் திருப்பூர் குமரன்' நாடக நுாலினை இடம் பெறச்செய்ய, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிந்துரைத்துள்ளார்.திருப்பூர், கருவம்பாளையத்தை சேர்ந்த ஆழ்வைக்கண்ணன். இவர், தனியார் பள்ளி தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், குமரனின் வாழ்க்கை வரலாற்றை நாடக வடிவில் எழுதி, 2004ல் முதல் பதிப்பை வெளியிட்டார்.

விடுதலை போராட்ட வீரரின் இந்த வரலாற்று ஆவணம் அனைத்து பொது நுாலங்களிலும் வைக்கப்பட்டன. பல்வேறு பள்ளி கலைநிகழ்ச்சிகளிலும், பொது மேடைகளிலும் நாடகமாக அரங்கேறியுள்ளன. இந்நுாலை அனைத்து அரசு, தனியார், சுயநிதி பள்ளி நுாலகங்களிலும் வைக்க மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.இதன் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், 'திரும்பிப்பார் திருப்பூர் குமரன்' எனும் வரலாற்று நாட நுாலை வாங்கி பயன்பெறுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஆழ்வை கண்ணன் கூறியதாவது:உரைநடை வடிவில் இல்லாது அனைத்து வயது குழந்தைகளும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் குமரனின் வரலாற்றை நாடக வடிவில் அளித்துள்ளேன். சமீபத்தில் குமரனின், 118 வது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது.திருப்பூர், தாராபுரம் உடுமலை, பல்லடம் உள்ளிட்ட அனைத்து கல்வி மாவட்டங்களிலும் உள்ள அனைத்து துவக்க, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 75503 16500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement