dinamalar telegram
Advertisement

வேலூரில் மழைநீர் வடியாததால் மக்கள் மறியல்

ADVERTISEMENT
வேலுார்: வேலுாரில், குடியிருப்புக்களை சூழ்ந்த மழைநீர் வடியாததால் மக்கள் சாலை மறியல் செய்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால், வேலுார் கன்சால்பேட்டையில் குடியிருப்புக்களை சுற்றி பல நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைக் கண்டித்து வேலுார் பழைய பைபாஸ் சாலையில் இன்று (டிச., 2ம் தேதி) காலை அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடம் வந்த மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
குடியிருப்புக்களை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் வைத்து அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனால் சமாதானம் அடைந்த மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement