சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க ஓட்டுனர் பயிற்சி
வேலூர்: ''சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, அவர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படும்,'' என, புதிதாக பொறுப்பேற்ற வேலூர் எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் கூறினார். வேலூர் மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த செல்வகுமார், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, வேலூருக்கு புதிய எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்ட ராஜேஷ் கண்ணன் நேற்று பொறுப்பேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில், ரவுடியிசம் ஒழிக்கப்பட்டு குற்றங்கள் தடுக்கப்படும். சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க பள்ளி, கல்லூரி செல்லாத மாணவர்கள் விபரம் கண்டறிந்து அவர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
டிரைவர் வேலை செய்பவர்கள் தான் வேலூரில் எல்லா திருட்டுத் செய்பவர்கள்.