dinamalar telegram
Advertisement

சேலத்தில் சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி: கொலை செய்யப்பட்டரா என போலீஸ் விசாரணை

Share
சேலம்: சேலம், குகையில் பாலடைந்த கட்டட சுவருக்கு அடியில் வாலிபரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், குகை, ராமலிங்கசவுடேஸ்வரி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் அதே பகுதியை சேர்ந்த பாழடைந்த கட்டடத்தை வாங்கியுள்ளார். அதில் உள்ள பழைய கட்டடங்கள் இடிக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று காலை, அந்த கட்ட சுவருக்கு அடியில் வாலிபரின் உடல் கிடப்பது குறித்து அப்பகுதி மக்கள் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். உடலை மீட்ட போலீசார், இறந்தது அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் ராஜேஷ்குமார்,24, என்பதை கண்டுபடித்தனர். சமையல் வேலைக்கு செல்லும் இவர், அதே பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து, நள்ளிரவு, 1:00 மணியை தாண்டி கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். நள்ளிரவில் பாழடைந்த வீட்டில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற நிலையில், அவர் மீது சுவர் இடிந்து விழுந்து இறந்தாரா, வேறு யாரேனும் கொலை செய்து போட்டு விட்டு, சுவரை இடிந்து அவர் மீது போட்டனரா என்ற சந்தேகத்தில், செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement