dinamalar telegram
Advertisement

அரசாணையின்றி 3 ஏரிகள் ஏலம்: கலெக்டரிடம் பஞ்., தலைவி புகார்

Share
கிருஷ்ணகிரி: கோட்டப்பட்டியிலுள்ள மூன்று ஏரிகள், அரசாணையின்றி ஏலம் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து, கோட்டப்பட்டி பஞ்., தலைவர் கீதா கோவிந்தசாமி நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் கோட்டப்பட்டி பஞ்.,க்கு உட்பட்டது, கோட்டப்பட்டி, சக்கிலிகுட்டை மற்றும் புலியூர் ஏரிகள். இந்த ஏரிகளில் மீன்பாசி குத்தகை விட, ஊராட்சி நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில், இதேபகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் கடந்த, 28ல் காலை, 11:00 மணிக்கு புலியூர் கிராமத்தில் கோட்டப்பட்டி, சக்கிலிகுட்டை ஏரிகளுக்கு தன்னிச்சையாகவும், அரசாணையின்றியும் ஏலம் விட்டுள்ளனர். ஊராட்சி செயலாளர் சர்தார்பாஷாவை வைத்து, கட்டப்பஞ்சாயத்து மூலம், மேற்படி இரண்டு ஏரிகளுக்கும் ஏலம் விடப்பட்டது. இவை இரண்டும், 10 லட்சத்து, 5,000 ரூபாய்க்கும், புலியூர் ஜம்பு ஏரியை, 26.75 லட்சம் ரூபாய்க்கும், அதை சுற்றியுள்ள தென்னை மரங்களை, 3.90 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் விட்டுள்ளனர். அரசு அனுமதி பெறாமல் நடந்த இந்த ஏலத்தை ரத்து செய்து, ஊராட்சி செயலாளர் சர்தார்பாஷா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement