dinamalar telegram
Advertisement

இருவேறு பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானைகளால் மக்கள் பீதி

Share
ஓசூர்: தேன்கனிக்கோட்டை மற்றும் ஜவளகிரி வனச்சரகத்தில் முகாமிட்டுள்ள இரு ஒற்றை யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனூர் மற்றும் ஜவளகிரி வனச்சரகத்தில், தனித்தனியாக இரு ஒற்றை யானைகள் முகாமிட்டுள்ளன. இதில், ஜவளகிரி வனச்சரகத்திலுள்ள கிரி என்ற பெயர் கொண்ட யானை, கொல்லப்பள்ளி, பாலதொட்டனப்பள்ளி, அகலகோட்டை, மேடுமுத்துக்கோட்டை ஆகிய கிராமங்களில் தினமும் முகாமிட்டு வருகிறது. அங்குள்ள கிராமப்புற சாலையை யானை கடப்பதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். அதேபோல், தேன்கனிக்கோட்டை வனச்சரம், நொகனூர் காப்புக்காட்டிலுள்ள ஒற்றை யானை, இரவில் வெளியேறி, விவசாய பயிர்களை நாசம் செய்கிறது. நேற்று அதிகாலை, மலசோனையில் முகாமிட்டிருந்த யானை, நொகனூரில் புகுந்து, நாகராஜன் மற்றும் பெருமாள் ஆகியோரது, இரண்டு ஏக்கர் ராகி பயிரை நாசம் செய்தது. இந்த யானைக்கு மதம் பிடித்துள்ளதால் ஆக்ரோஷமாக காணப்படுகிறது. தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் மற்றும் வனத்துறையினர், பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். இரு ஒற்றை யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளதால், கிராமங்களுக்கு யானைகள் வருவதை தடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement