dinamalar telegram
Advertisement

தடுப்பூசி போடாமல் வெளியில் வந்தால் நடவடிக்கை; கலெக்டர்

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ?கொரோனா பாதிப்பு, தற்போது நாளொன்றுக்கு, 10க்கும் கீழ் குறைந்துள்ளது. பொதுமக்கள் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம், 15 லட்சத்து, 2,000 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள். இதில், 10 லட்சத்து, 86 ஆயிரத்து, 500 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும், 4 லட்சத்து, 20 ஆயிரம் பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. தற்போது, 'ஒமைக்ரான்' எனும் புதிய வகை வைரஸ் பரவி வரும் சூழலில், மாவட்டத்தில் மீதமுள்ள அனைவரும், கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் மாவட்டத்திலுள்ள பொதுஇடங்களில் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement