dinamalar telegram
Advertisement

லாரி மோதி மாணவர் பலி

Share
ஓசூர்: சூளகிரி தாலுகா, சின்ன சிகரலப்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி கிருஷ்ணப்பா, 45, என்பவரின் மகன் ரமேஷ், 17; ஓசூர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்; நேற்று முன்தினம் காலை, தன் தந்தையுடன் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார். சீத்தாராம்மேட்டிலுள்ள ரிங்ரோடு ஜங்ஷனில், அவ்வழியாக வந்த டிப்பர் லாரி, மொபட் மீது மோதியது. இதில் மாணவர் ரமேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணப்பா லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement