dinamalar telegram
Advertisement

பள்ளி மாணவி பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

Share
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த தொண்ணகுட்டஹள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ், 25. இவர் கடந்த, 2016ல் பள்ளி மாணவியை மிரட்டி, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மாணவியின் பெற்றோர் புகார்படி, பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார், பிரகாஷை போக்சோவில் கைது செய்தனர். இவ்வழக்கு, தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த பிரகாஷூக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும், 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement