dinamalar telegram
Advertisement

ஆன்லைன் மூலம் ரூ.1.84 லட்சம் மோசடி

Share
சேலம்: தனியார் நிறுவன ஊழியரிடம் ஆன்லைன் மூலம், 1.84 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், காடையாம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன், 33. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மொபைல் போனுக்கு, கடந்த நவ., 29ல், 'உங்கள் எஸ்.பி.ஐ., வங்கி கணக்கை தரம் உயர்த்த உள்ளதால் ஆதார் உள்ளிட்ட விபரங்களை பதிவிடவும்' என, எஸ்.பி.ஐ., வங்கி செயலி போன்று அனுப்பி உள்ளனர். அச்செயலியை பதவிறக்கம் செய்து, பிரபாகரன் விபரங்களை தெரிவித்த நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து, ஒரு லட்சத்து, 84 ஆயிரத்து, 550 ரூபாயை மர்ம நபர் எடுத்துள்ளார். இந்த மோசடி குறித்து பிரபாகரன் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement