dinamalar telegram
Advertisement

ஆசிரியர்கள், போலீசாருக்கு கவுரவம் கொடுத்த தி.மு.க., அரசு: அமைச்சர்

Share
திருச்சி : ''ஆசிரியர்கள், போலீசார் சம்பளத்தை உயர்த்தியது தி.மு.க., அரசு தான்,'' என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு பேசினார்.


@@@திருச்சியில் திருவெறும்பூர் மான்போர்டு பள்ளியில் நடந்த விழாவில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் பங்கேற்று, 111 மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருதுகளை வழங்கினர்.

அமைச்சர் நேரு பேசியதாவது:

ஆசிரியர்களுக்கும், போலீசாருக்கும் மற்ற அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தி கவுரவத்தை அளித்தது தி.மு.க., அரசு தான். பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு, 34 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது. இந்த துறையில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துக் கொண்டே உள்ளது. நிதிச்சுமை காரணமாக உடனடியாக எதையும் செய்ய முடியவில்லை. 5 லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்து விட்டு அ.தி.மு.க., அரசு சென்றுள்ளது. ஆகையால் ஆசிரியர்களுக்கு படிப்படியாக நன்மைகள் செய்வோம்.

இவ்வாறு அமைச்சர் நேரு பேசினார்.


விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசுகையில், ''வறுமை காரணமாக கல்வி கற்க முடியாதவற்களுக்காக எழுத்தறிவு இயக்கம் நடத்தப்படுகிறது. 15 வயதுக்கு மேற்பட்ட, 35 வயதுக்குட்பட்டோர் இத்திட்டம் மூலம் பயன்பெறுவர்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement