dinamalar telegram
Advertisement

ஒமிக்ரான் வைரஸ் பரிசோதனைக்காக 4 மணி நேரம் காத்திருந்த பயணிகள் அதிருப்தி

ADVERTISEMENT

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள், ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக, நான்கு மணி நேரம் காத்திருந்து பின், அனுப்பி வைக்கப்பட்டனர்.





மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, சென்னை, திருச்சி, கோயம்புத்துார் மற்றும் மதுரை ஆகிய விமான நிலையங்களில், ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று காலை, 6:20 மணிக்கும், 8:10 மணிக்கும் சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் இணைப்பு விமானங்கள் திருச்சி விமான நிலையம் வந்தன.இந்த இரண்டு விமானங்களிலும் வந்த, 272 பயணிககளுக்கு, சுகாதாரத்துறை சார்பில், ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டன.

பரிசோதனைக்கு பின், 'மூன்று மணி நேரத்தில், முடிவு தெரிவிக்கப்படும்,' என்று கூறி, விமான பயணிகளை, விமான நிலையத்திலேயே தங்க வைத்தனர். ஆனால், காலை 11:00 மணிக்கு மேலாகியும் பரிசோதனை முடிவு அறிவிக்கப்படாததால், காலை உணவு கூட சாப்பிடாமல் விமான நிலையத்திலேயே இருந்த பயணிகள், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதையடுத்து, 'பரிசோதனை முடிவுகள் மெயிலில் அனுப்பி வைக்கப்படும்,' என்று கூறி பயணிகளை சமாதானப்படுத்தி, வெளியே அனுப்பி வைத்தனர். காலை, 6:10 மணிக்கு வந்த பயணிகள், காலை, 11:20 மணிக்கு வெளியே அனுப்பி வைக்கப்பட்டதால், கடும் அதிருப்தியடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement