dinamalar telegram
Advertisement

உத்திரமேரூர் ஏரியில் 950 கனஅடி நீர் திறப்பு

Share
உத்திரமேரூர்-செய்யாற்றில் இருந்து, உத்திரமேரூர் ஏரிக்கு, வினாடிக்கு 900 கன அடி வெள்ளநீர் வருவதால், ஏரியின் பாதுகாப்பு கருதி, நரிமடை மற்றும் கலங்கல் வழியாக, 950 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.உத்திரமேரூர் ஏரி, 18 மதகுகள்; 958.81 மில்லியன் கன அடி கொள்ளளவும் உடையது; 18 கிராமங்களில் 5,462 ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்னதாகவே, செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அக்., 29ல், உத்திரமேரூர் ஏரி, 20 அடி உயரம் நிரம்பியதால், கலங்கல் வழியாக, 537 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.பருவமழை தீவிரமடைந்த பின், ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்ததால், நவ., 8ல் நரிமடை திறக்கப்பட்டு, வினாடிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.சில தினங்களாக ஏரிக்கு, வினாடிக்கு 900 கன அடி வெள்ளநீர் வருகிறது. இதனால், ஏரியின் பாதுகாப்பு கருதி, இரு கலங்கல் வழியாக, 650 கன அடி நீரும், நரிமடை வழியாக, 300 கன அடி என, மொத்தம், 950 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement