வடகால் கிராமத்தில் வெள்ளம் நிரந்தர தீர்வுக்கு எதிர்பார்ப்பு
செங்கல்பட்டு--செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் ஊராட்சி வடகால் கிராமம் திருச்சி - தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 5 கி.மீ., மேற்கிலும், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, ஆத்துார் பகுதியிலிருந்து, 15 கி.மீ., வடக்கிலும் உள்ளது. 2,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.அத்தியாவசிய தேவைகள், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்காக, செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.முடக்கம்தொடர் கன மழையால், சிங்கபெருமாள் கோவில், திருக்கச்சூர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி, உபரி நீர் இப்பகுதியில் சூழ்ந்துள்ளது. வாலாஜாபாத், தென்னேரி வடக்குப்பட்டு ஏரிகளின் உபரி நீரும், இங்கு சூழ்ந்துள்ளது.தனி தீவாக மாறியுள்ள இந்த கிராமத்திற்கு, தற்காலிகமாக பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு, அத்தியாவசிய தேவைக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.மருத்துவம், வேலைக்கு செல்வோரின் வசதிக்காக மாட்டு வண்டிகளில் இருசக்கர வாகனம் ஏற்றி, பிரதான சாலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்காக ஒரு வாகனத்திற்கு 100 ரூபாய் பணம் பெறப்படுகிறது.மழை நீர் வடியும் வரை, வட்டார வளர்ச்சி நிர்வாகம், சாதாரண படகுகளை இயக்குகிறது. வடகால் கிராமத்தினர் கூறியதாவது:மழைக்காலத்தில், வெள்ளம் சூழும் இப்பகுதியை கடக்க 500 மீட்டர் நீளத்திற்கு, தரைப்பாலம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பணி துவங்கி, 170 மீட்டர் நீளத்திற்கு மட்டும் பாலம் அமைத்து, எஞ்சிய பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.சாலைகளை 5 அடி உயரத்திற்கு உயர்த்த வேண்டும். முடங்கிய பாலப்பணியை விரைவுபடுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், ஆண்டுதோறும் மழை வெள்ளத்தில் சிக்காமல் இருப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.வட்டார வளர்ச்சி அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வடகால் கிராமத்தை நேற்று பார்வையிட்டனர். தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில்ஈடுபட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!