விக்கிரவாண்டி ஒன்றிய கூட்டம்
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டியில் ஒன்றிய முதல் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, சேர்மன் சங்கீதா அரசி ரவி துரை தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, பி.டி.ஓ.,க்கள் நாராயணன், குலோத்துங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, குணசேகரன், கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!