dinamalar telegram
Advertisement

சத்துணவு பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு ரத்து

Share
விழுப்புரம்-சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தின்கீழ் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெற்று நேர்க்காணல் நடந்தது.நிர்வாக காரணங்களுக்காக இதுவரை இப்பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், அதற்கான அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.இந்நேரடி நியமன நடவடிக்கை அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டவையாகும். இதனால், இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவது குறித்து விண்ணப்பத்தாரர்களிடமிருந்து பெறப்படும் எவ்வித மேல்முறையீடுகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது.மேலும், பணியிடங்கள் பூர்த்தி செய்வது குறித்த அறிவிப்பு பின்னர் தனியே வெளியிடப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement