dinamalar telegram
Advertisement

போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்ற வாலிபர் கைது

Share
திருச்சி:போலி பாஸ்போர்ட் மூலம், திருச்சியில் இருந்து துபாய் செல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு துபாய் செல்வதற்காக வந்த வாலிபரின் பாஸ்போர்ட்டை, இமிகிரேஷன் அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அதில், போலி பெயர் மற்றும் முகவரியில் பாஸ்போர்ட் எடுத்திருப்பதை கண்டுபிடித்தனர்.அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம், சல்லிமலை பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் மகனான முஜிபூர் ரகுமான், 32, என்ற அவர், முகமத் முஜிபூர் என்ற போலி பெயரில் பாஸ்போர்ட் எடுத்து, அதன் மூலம் வெளிநாடு செல்ல இருந்தது தெரிய வந்தது.திருச்சி விமான நிலைய போலீசில் இமிகிரேஷன் அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வாலிபரை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement