dinamalar telegram
Advertisement

தணிக்கை குழு உதவி இயக்குனர் வீட்டில் சோதனை

Share
திருநெல்வேலி:நெல்லையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளாட்சி துறை தணிக்கை குழு உதவி இயக்குனர் முகமது லெப்பை வீட்டில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நவ., 29ல் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், தென்காசி, செங்கோட்டை ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களின் உள்ளாட்சி கணக்கு தணிக்கை செய்யும் பொழுது கணக்கில் வராத 88 ஆயிரத்து 600 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் தணிக்கை துறை உதவி இயக்குனர் முகமது லெப்பையும் ஒருவர். திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியில் உள்ள முகமது லெப்பை வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.சொத்து ஆவணங்கள், நகைகள் வாங்கிய பில், வங்கி கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement