dinamalar telegram
Advertisement

கேரளாவுக்கு பஸ்கள் இயக்கம்

Share
தமிழகம்-கேரளா இடையே 21 மாதங்களுக்கு பின் நேற்று பஸ் போக்குவரத்து துவங்கியது.

கடந்தாண்டு மார்ச் கடைசியில், கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததால், இந்தாண்டு அக்டோபர் முதல் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து துவங்கியது.

கேரளாவில் கொரோனா பரவல் அதிகம் இருந்ததால், பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட வில்லை. ஸ்டாலினுக்கு கடிதம்தற்போது, கேரளாவில் கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதால் போக்குவரத்துக்கு அனுமதிக்கும்படி, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து, 21 மாதங்களுக்கு பின் நேற்று, தமிழகம் - கேரளா இடையே பஸ் போக்குவரத்து துவங்கியது. தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு நகரங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன.
கோவை, உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, நேற்று காலை பாலக்காடு, திருச்சூர், கொச்சி, மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல் கேரள அரசு பஸ்களும் இங்கு வந்தன. பயணியர் முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர்.
பயணியர் கூறுகையில்,'கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பஸ் போக்குவரத்து இன்றி மிகவும் சிரமம் ஏற்பட்டது. 'வாளையாரில் இறங்கி கேரளாவுக்கு வேறு பஸ்சில் செல்ல வேண்டிஇருந்தது. தற்போது நேரடியாக பஸ்கள் இயக்கப்படுவதால் சிரமம் நீங்கியது' என்றனர்.

தேங்காய் உடைப்பு



கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டம், கூடலுார் வந்த அம்மாநில அரசு பஸ்சுக்கு, தமிழக - கேரள எல்லையான நாடுகாணியில், ஆட்டோ டிரைவர்கள், பயணியர் மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து வரவேற்பு அளித்தனர். கூடலுாரில் இருந்து நிலம்பூர் சென்ற, தமிழக அரசு பஸ்சில் இருந்த பயணியருக்கு, கேரள மக்கள் இனிப்பு வழங்கி வரவேற்பு அளித்தனர்.

- நமது நிருபர் -

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement