dinamalar telegram
Advertisement

வாலிபர் மர்மச்சாவு போலீஸ் விசாரணை

ADVERTISEMENT
சேலம்:கட்டட சுவருக்கு அடியில் வாலிபரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம், குகையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், அப்பகுதியில் பாழடைந்த கட்டடத்தை வாங்கியுள்ளார். அதில் உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று காலை, கட்டட சுவருக்கு அடியில் ஒரு வாலிபரின் உடல் கிடந்தது. செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், 24, என்பது தெரிந்தது. சமையல் வேலைக்கு செல்லும் இவர், நண்பர்களுடன் நள்ளிரவு வரை அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது வழக்கம்.
நள்ளிரவில் இயற்கை உபாதை கழிக்க சென்ற நிலையில், அவர் மீது சுவர் இடிந்து விழுந்து இறந்தாரா? வேறு யாரேனும் கொலை செய்து போட்டு சென்றனரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement