dinamalar telegram
Advertisement

648 தரைப்பாலம் உயர் மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்படும்: அமைச்சர் வேலு பேட்டி

Share
வேலூர்: ''தமிழகத்தில், 648 தரைப்பாலம் உயர் மட்ட பாலமாக மாறறி அமைக்கப்படும்,'' என, நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கூறினார்.
வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் தரைப்பாலம் வெள்ளத்தில் சேதமடைந்ததை நேற்று பார்வையிட்ட பின் அமைச்சர் வேலு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பலத்த மழை பெய்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் பெய்த மழையால், 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாலாற்றில் வெள்ளம் ஓடியது. இதனால், 322 மீட்டர் நீளமுள்ள விரிஞ்சிபுரம் தரைப்பாலம் உடைந்து சேதமடைந்தது. இதில், 80 மீட்டர் தூரத்துக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தண்ணீரின் வேகம் குறைந்த பிறகு தற்காலிகமாக போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். 30 கோடி ரூபாய் மதிப்பில் இங்கு உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்படும். தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 1,281 தரைப்பாலங்களில், 648 உயர் மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்படும். மழை முடிந்த பிறகு தான் சேதத்தை முழுமையாக கணக்கெடுக்க முடியும். தற்காலிகமாக, 1,444 கோடி ரூபாய் நிவாரணமாக மைய அரசிடம் கேட்டுள்ளோம். நெடுஞ்சாலைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட, 200 கோடி ரூபாய் நிதியிலிருந்து பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.,க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement