dinamalar telegram
Advertisement

உதவி கலெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

Share
திருச்சி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மன்னார்குடி வருவாய் நீதிமன்ற பெண் உதவி கலெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வருவாய் நீதிமன்ற உதவி கலெக்டராக இருப்பவர் பவானி, 54. இவரது வீடு, திருச்சி, ஸ்ரீரங்கம் நெல்சன் சாலையில் உள்ளது. இவர் முன்பு ஸ்ரீரங்கத்தில் தாசில்தாராக பணியாற்றி உள்ளார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி உதவி கலெக்டர் பவானியின் ஸ்ரீரங்கம் வீட்டில், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான போலீசார், நேற்று காலை, 6:30 மணிக்கு சோதனை நடத்தினர். அதேபோல இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார், பவானி குடும்பத்தினர் பங்குதாரராக இருக்கும், மண்ணச்சநல்லூரில் உள்ள எஸ்.வி.ஆர்., மெட்ரிக் பள்ளியிலும், இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி தலைமையிலான போலீசார், லால்குடி தாலுகா வாளாடியில் உள்ள பெட்ரோல் பங்க்கிலும் சோதனை நடத்தினர். மதியம், 2:30 வரை சோதனை நடந்தது. உதவி கலெக்டர் பவானி, கோடிக்கணக்கான ரூபாய் சொத்து சேர்த்துள்ளதற்கான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கோலோச்சியவர்: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் திருச்சி கலெக்டராக ஜெயஸ்ரீ முரளிதரன் இருந்தபோது, அவருக்கு மிகவும் நெருக்கமானவராக பவானி வலம் வந்தார். அப்போது பல முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு நில விவகாரங்களை தீர்க்க துணை புரிந்து பலன் அடைந்துள்ளார். இவர் முதல் கணவர் இறந்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இரண்டாவது கணவரும் அண்மையில் இறந்து விட்டார். இரண்டு மகன்கள் உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement