dinamalar telegram
Advertisement

ஏ.பி.ஆர்.ஓ., வேலை மோசடி கமல் கட்சி நிர்வாகி மீது வழக்கு

Share
திருச்சி:ஏ.பி.ஆர்.ஓ., மற்றும் அரசு வேலைகள் வாங்கித் தருவதாக, 11 லட்சம் ரூபாய் மோசடி செய்த, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகனுக்கு, தமிழக செய்தி துறையில் ஏ.பி.ஆர்.ஓ., வேலை வாங்கித் தருவதாக, மதுரை, அய்யர் பங்களா பகுதியைச் சேர்ந்த மாரிக்கண்ணன், 40, என்பவர் கூறி உள்ளார். இவர், மக்கள் நீதி மய்யம் கட்சியில் நிர்வாகியாக உள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளை தெரியும் என கூறியதால், ஓராண்டுக்கு முன் கார்த்திகேயன் முன் பணமாக, 2 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் இருவரிடம், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, தலா 5 லட்சம் மற்றும் 4 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார்.ஆனால், யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை.
மூவரும் பணத்தை திருப்பிக் கேட்டபோது, மிரட்டல் விடுத்துள்ளார்.கார்த்திகேயன் திருச்சி ஐ.ஜி., பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், மாரிக்கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement