dinamalar telegram
Advertisement

மண் லாரி; மக்கள் மறியல்

அவிநாசி: அவிநாசி அருகே நம்பியூர் ரோட்டில், மண் ஏற்றி வந்த லாரி, நேற்று மதியம், ஒரு மணிக்கு, சாவக்கட்டுப்பாளையம், கூட்டப்பள்ளி சாலையில் பழுதால், நடுரோட்டில் நின்றது. பல மணி நேரம் அந்த லாரி ரோட்டின் குறுக்கே நின்றதால், அவ்வழியாக போக்குவரத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது.இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள், இரவு, 8:00 மணிக்கு கூட்டப்பள்ளி சாலையில், மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற சேவூர் போலீசார், பழுது நீக்கி, லாரியை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அதன்பின், 9:00 மணிக்கு மக்கள் மறியலை கைவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement