லாரி மோதி ஒருவர் பலி
திருப்பூர்: திருப்பூரில், டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில், ஒருவர் பரிதாபமாக இறந்தார்.திருப்பூர், தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையத்தை சேர்ந்த மணியன், 57. இவர் நேற்று காலை, தனது மகள், பேத்தி உடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். செவந்தாம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக பழுதான பொக்லைன் இயந்திரத்தை ஏற்றி சென்ற லாரி, டூவீலர் மீது மோதியது.அதில், சக்கரத்துக்குள் விழுந்த மணியன் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். மகள் மற்றும் பேத்தி காயமின்றி உயிர்தப்பினர். விபத்து தொடர்பாக டிரைவர் ஆனந்தன், 46 என்பவரை நல்லுார் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!