போக்சோ; முதியவர் கைது
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த, 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அருகே உள்ள அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வருகிறார்.பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம், பக்கத்து வீட்டை சேர்ந்த, 80 வயது முதியவர், கடந்த, மூன்று நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார். புகாரின் பேரில், திருப்பூர் வடக்குஅனைத்து மகளிர் போலீசார் நடராஜ், 80 என்பவரை, 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!