சேவூர் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது?
அவிநாசி: அவிநாசி -- சேவூர் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, இரண்டாவது 'நோட்டீஸ்' வழங்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.அவிநாசி -- சேவூர் ரோட்டில், நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. சேவூர் இடைப்பட்ட பகுதிகள் மட்டுமின்றி, சத்தி, புளியம்பட்டி, நம்பியூர், அந்தியூர் என, பல்வேறு இடங்களுக்கு இந்த சாலை தான் பிரதானமாக இருப்பதால், நகர்ப்புற சாலைகளுக்கு நிகரான முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.இந்நிலையில், அவிநாசி -- சேவூர் சந்திப்பு சாலை முதல், மடத்துப்பாளையம் பிரிவு, பண்ணாரி அம்மன் கோவில் வரை, ரோட்டோரம் அதிகளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன. பல கடைகளின் முகப்பு பகுதி, நெடுஞ்சாலையில் தான் உள்ளது.சாலையோர ஆக்கிர மிப்புகளால் வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்தும் நேரிடுகிறது. எனவே, ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.2வது நோட்டீஸ்நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- சேவூர் சாலையில், நெடுஞ்சாலையின் எல்லை வரையுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பட்சத்தில், அகற்றப்பட்ட இடத்தில் நடைபாதை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட கட்டுமான பணிகளை செய்தாக வேண்டும்.ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றிவிட்டு, வெறுமனே விட்டு விட்டால், மீண்டும் அந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் முளைத்துவிடும். எனவே, கட்டமைப்பு சார்ந்து நிதி பெற்றவுடன், சாலையின் எல்லை வரையுள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்படும். தற்போது, நெடுஞ்சாலையோரம் உள்ள கடைகளின் முகப்பு ஷெட் உள்ளிட்ட முகப்பு பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ள வியாபார பொருட்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஏழு நாள் கால அவகாசத்துடன், இரண்டாவது நோட்டீஸ்' வழங்கப்பட்ட பின், அவை அகற்றப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதேபோல், மடத்துப்பாளையம் ரோட்டிலும் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இங்குள்ள ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்தவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!