தமிழகத்தில் கட்டுமான பொருட்கள் 30 சதவீதம் விலைவாசி உயர்வு
வேலூர்: ''தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, 30 சதவீதம் உயர்ந்துள்ளது,'' என, காங்., மாநில தலைவர் அழகிரி கூறினார்.
வேலூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ.,அரசின் தவறான கொள்கையால் விலைவாசி உயர்ந்துள்ளது. இதை எடுத்துரைக்கும் வகையில், காங்., சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த, 22 முதல், 29 வரை மக்கள் விழிப்புணர்ணவு பிரசார நடைபயணம் நடத்தப்பட்டு வருகிறது. காங்., ஆட்சியில் கச்சா எண்ணெய் டாலர், 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 60 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைவாக விற்பனை செய்யலாம். ஆனால், மத்திய அரசு அவ்வாறு செய்யவில்லை. வெள்ள நிவாரண பணிகளை, தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. தற்போதையை வெள்ள பாதிப்பின்போது, முதல்வர் முதல் அதிகாரிகள் வரை துரிதமாக செயல்படுகின்றனர். இதனால், மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. வெள்ள நிவாரண நிதியை, மத்திய அரசு உடனே ஒதுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி, கட்டுமான பொருட்களான சிமென்ட், கம்பி, மணல் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், 30 சதவீதம் உயர்ந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., கூட்டணியில், காங்., போட்டியிட குறைந்த இடங்கள் ஒதுக்கப்படுவது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, குறைந்த இடங்களை ஒதுக்குகிறார்கள், அவை பேசி தீர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
20 நாட்களாக தண்ணீர் சூழ்ந்துள்ள து எங்கள் சாலைகள் மற்றும் எங்கள் நகரில். எத்தனைமுறை முயன்றாலும் அரசு கார்ப்பரேஷன் அதிகாரிகள் ஒன்றும் செய்ய வில்லை.எங்கள் தொகுதி எம்எல்ஏ தான் ஊராட்சி அமைச்சர்.நேற்று ஃபோட்டோ எடுத்து க்கொண்டானர்