பட்டாக்கத்தியில் கேக் வெட்டியவர் குண்டர் சட்டத்தில் கைது
புதுக்கோட்டை : ஜெகதாப்பட்டினம் கடை வீதியில் பட்டாகத்தியால் கேக் வெட்டிய நபரை போலீசார் குண்டர்சட்டத்தில் கைது செய்தனர்.
@@புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர் அலெக்ஸ்பாண்டியன் 26. இவர் நவ., 7ம் தேதி ஜெகதாப்பட்டினம் பகுதியில் அவரது பிறந்தநாளை பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார். இதுகுறித்து ஜெகதாபட்டினம் போலீசார் வழக்கு பதிந்து அலெக்ஸ்பாண்டியனை கைது செய்து அறந்தாங்கி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அலெக்ஸ் பாண்டியன்ஜெகதாப்பட்டினம் போலீஸ் ஸ்டேஷன் ரவுடிகள் பதிவேட்டில் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைதான அலெக்ஸ்பாண்டியன் புதுக்கோட்டை மாவட்ட சிறையிலிருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!