விழிப்புணர்வு பயிற்சி முகாம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக, தர்மபுரியில் சாலையோர சிற்றுண்டி, பானிபூரி, பாஸ்ட் புட், கூழ் வண்டி, சில்லி சிக்கன், சிப்ஸ், பழங்கள் உள்ளிட்ட நடமாடும் உணவு வணிகர்களுக்கான சிறப்பு பயிற்சி, விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமை வகித்தார். உணவு பாதுகாப்புதுறை அங்கீகாரம் பெற்ற அமைப்பின் பயிற்றுனர் திவ்யா பாஸ்கரன், நடமாடும் உணவு வணிகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தன்சுத்தம், சுற்றுப்புற சுத்தம், பொருள் மேலாண்மை, கையாளுதல், பரிமாறுதல், பூச்சிகள் கட்டுபாடு, குடிநீர் தன்மை உள்ளிட்ட விபரங்கள் தெளிவாக விளக்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!