அரசு பஸ் நடத்துனர் சாவு
ஈரோடு: சூரம்பட்டி வலசு, அணைகட்டு ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார், 53; அரசு போக்குவரத்து கழக, சேலம் ஜான்சன்பேட்டை கிளை நடத்துனர். சர்க்கரை நோய் பாதித்த நிலையில், 11 மாதங்களாக சூரம்பட்டியில் தனியாக வசித்தார். மனைவி ஜெயா, 47, சேலத்தில் மகன்களுடன் வசிக்கிறார். மூன்று மாதங்களாக செந்தில்குமார் வேலைக்கு செல்லவில்லை. கடந்த, 24ம் தேதி காலை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!