ரூ.200 தராமல் டிமிக்கி: இளசுக்கு சேதாரம்; பெருசுக்கு செய்கூலி
சென்னிமலை: சென்னிமலை அருகே, 200 ரூபாய் தராமல் இழுத்தடித்த இளைஞரை, கத்தியால் குத்திய முதியவரை, போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்தி, 28; சென்னிமலை அருகே கொளத்துப்பாளையத்தில் தங்கியுள்ளார். அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் ஆறு மாதங்களாக பணியாற்றி வருகிறார். சின்னபிடாரியூரை சேர்ந்தவர் முருகேசன், 74; நெசவு தொழிலாளியான இவரிடம், 200 ரூபாய்க்கு மொபைல்போன் பேட்டரி வாங்கியுள்ளார். ஆனால், பணம் தராமல் ஒரு வாரமாக இழுத்தடித்து வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் நேற்று மதியம் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால், கார்த்தி தொண்டை குழியில் முருகேசன் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த அவர், பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னிமலை போலீசார் முருகேசனை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!