5,400 வாழைத்தார்கள் ரூ.4.27 லட்சத்துக்கு விற்பனை
கோபி: கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று முன்தினம் வாழைத்தார் ஏலம் நடந்தது. ஏலத்தில், கதளி ஒரு கிலோ, 18 ரூபாய், நேந்திரம், 22 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 200, தேன்வாழை, 240, செவ்வாழை, 410, ரொபஸ்டா, 140, மொந்தன், 180, ரஸ்த்தாளி, 400, பச்சைநாடான், 190 ரூபாய்க்கு விலைபோனது. விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்த, 5,400 வாழைத்தார்களும், 4.27 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக, அதன் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!