ADVERTISEMENT
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே மின் ஒயர்களை திருடச் சென்ற இருவர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
நாகர்கோவில் அருகே கோட்டார் பாறைக்கால் மட தெருவை சேர்ந்தவர் டான் போஸ்கோ (27), கருங்கல் தொலையா வட்டத்தைச் சார்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர் (33). இவர்கள் இருவரும் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் ஒயர்களை திருடச் சென்றுள்ளனர்.
அங்குள்ள ஒயர்களை வெட்டி எடுத்து வரும்போது உயர் அழுத்த மின் கம்பியில் திருடிய ஒயர்கள் சிக்கியதால் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். உடல்களைக் கைப்பற்றி வடசேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!