dinamalar telegram
Advertisement

ரயில் பாதையில் நிலச்சரிவு போக்குவரத்து மாற்றம்

மதுரை:திருவனந்தபுரம் - நாகர்கோவில் ரயில் பாதையில் குழித்துறை அருகே நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால், ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேற்றிரவு குருவாயூரிலிருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயிலும், இன்று காலை சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூர் புறப்படும் விரைவு ரயிலும், திருநெல்வேலி - குருவாயூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்றிரவு சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய கொல்லம் அனந்தபுரி விரைவு ரயிலும், இன்று கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூர் புறப்படும் அனந்தபுரி விரைவு ரயிலும், நாகர்கோவில் - கொல்லம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று திருச்சியிலிருந்து புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு ரயிலும், திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட வேண்டிய திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயிலும், திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலியிலிருந்து இன்று புறப்படும்

பிலாஸ்பூர் சிறப்பு ரயில், திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும். இன்று மதுரையிலிருந்து புறப்படும் புனலுார் விரைவு ரயில், திருநெல்வேலி வரை இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரயில், திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 4:00 மணிக்கு புறப்பட்டு மதுரை வந்து சேரும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement