dinamalar telegram
Advertisement

சிறுமியை கர்ப்பமாக்கிய சகோதரர் போக்சோவில் கைது

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையில் சிறுமியை கர்ப்பமாக்கிய சகோதரரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

நாகலாந்தை சேர்ந்தவர் 35 வயது நபர், நித்திரவிளை மேற்குகடற்கரை சாலை ஓட்டலில் வேலை பார்த்தார். நித்திரவிளையில் ஒரு வீட்டில் வசிக்கிறார். திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் ஊரில் உள்ளனர்.சில மாதங்களுக்கு முன் அவரது 17 வயது சகோதரி நித்திரவிளையில் உள்ள வீட்டுக்கு வந்தார்.

சகோதரிக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டதால் திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார்.பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் இருவரையும் அழைத்து வந்து சகோதரரை போக்சோவில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement