ADVERTISEMENT
புதுக்கோட்டை:புதுக்கோட்டடை மாவட்டம், அன்னவாசல் அருகே, மேலப்பழுவஞ்சி கிராமத்தில் மயானத்திற்கு செல்ல பாதை இல்லை. இதனால் கண்மாய் நீரில் நீந்தி, சடலத்தை கொண்டு செல்லும் அவல நிலை நீடிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மேலப்பழுவஞ்சி மற்றும் கீழப்பழுவஞ்சி ஆகிய கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கான மயானம், இரண்டரை கி.மீ., தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. மயானத்துக்கு செல்வதற்கு பாதை இல்லாததால், அப்பகுதி மக்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, மழைக் காலத்தில் கண்மாய் நீரில் நீந்தி, இறந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்கின்றனர்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம், 60, என்பவர் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால், உறவினர்கள், மழையால் நிறைந்திருக்கும் கண்மாய் நீரில் நீந்தி சடலத்தை கொண்டு சென்று, மாலை 4:30 மணியளவில் தகனம் செய்தனர். அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து, மயானத்திற்கு செல்ல பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இப்பகுதியில் பாலம் அமைத்தால், கீழ பலுவஞ்சி கிராமத்திலிருந்து, பேரையூர் கிராமத்திற்கு சென்று வருவதற்கும் எளிதாக இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!