dinamalar telegram
Advertisement

அனுமதி இல்லாத காப்பகம்: 105 மனநோயாளிகள் மீட்பு

Share
புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே அனுமதி இல்லாமல் செயல்பட்ட காப்பகத்துக்கு 'சீல்' வைத்து, 105 மனநோயாளிகள் மீட்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, மாவட்டத்தில் இயங்கி வரும் காப்பகங்களில், நீதிமன்றம் மற்றும் தமிழக அரசு உத்தரவுப்படி, நேற்று ஆய்வு மேற்கொண்டார். அறந்தாங்கி அருகே அழியாநிலை பகுதியில் உள்ள காப்பகம், உரிய அனுமதியின்றி செயல்பட்டது தெரிய வந்தது.அதற்கு சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அங்கிருந்த 100க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அதேபோல், கந்தர்வகோட்டை அருகே அரியாணிபட்டியில் வீரமணி, 48, என்பவர் ஐந்து ஆண்டு களாக நடத்தி வரும் மனநல காப்பகத்தில், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த காப்பகத்துக்கும் உரிய அனுமதி இல்லை.அங்கிருந்த, 105 மனநோயாளிகள் மற்றும் முதியவர்கள், தாங்கள் கொடுமைப் படுத்தப்படுவதாக புகார் கூறினர். அந்த காப்பகத்திற்கும் 'சீல்' வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். 105க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement