dinamalar telegram
Advertisement

ஏ.டி.எம்.,க்கு வருபவர்களிடம் பணம் திருட்டு : 3 பேர் கைது

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில், வங்கி ஏ.டி.எம்.,க்கு பணம் எடுக்க வருபவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து, பணம் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.


@@புதுக்கோட்டை டவுன் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம்.,ல், கடந்த 1ம் தேதி, கண்ணன்,56, என்பவர் 16 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். அப்போது, அவரது ஏ.டி.எம்., கார்டு கீழே விழுந்ததாக, வட மாநிலத்தை சேர்ந்த சிலர் எடுத்துக் கொடுத்துள்ளனர்.அதன் பின், அவரது வங்கி கணக்கில் இருந்து, 50 ஆயிரத்து 700 ரூபாய் திருடப்பட்டதும், ஏ.டி.எம்., கார்டு மாற்றப்பட்டதும் தெரிய வந்தது. இது குறித்து, டவுன் போலீசில், அவர் புகார் அளித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி., நிஷா பார்த்திபன் உத்தரவின்படி அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், டவுன் பகுதி மற்றும் வங்கி ஏ.டி.எம்.,களில் உள்ள சி.சி.டி.,வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் உள்ள பதிவுகளை வைத்து, மர்ம நபர்களை அடையாளம் கண்ட போலீசார், திருச்சி, கோயம்புத்துார் ஆகிய மாவட்டங்களில் பதுங்கி இருந்த பீகாரை சேர்ந்த பஹருலால் சஹானி,38, சுனில்சா,31, அரவிந்த் சஹானி,33, ஆகியோரை, நேற்று கைது செய்து, திருமயம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement