dinamalar telegram
Advertisement

ஐப்பசிக்கு முன்பதிவு செய்தவர்கள் நவ. 3ல் தரிசனம் செய்யலாம்: தேவசம்போர்டு அறிவிப்பு

Share
சபரிமலை:ஐப்பசி மாத பூஜைக்கு முன்பதிவு செய்தவர்கள் நவ.3ல் தரிசனம் செய்யலாம் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.


சபரிமலையில் ஐப்பசி மாத பூஜை அக்.,17 முதல் 21 வரை நடந்தது. கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்படடது. முன்பதிவு செய்து வந்திருந்த பக்தர்கள் நிலக்கல் வரை வந்து விட்டு திரும்பி சென்றனர்.

சித்திரை ஆட்ட திருநாள் பூஜைக்காக நவ., 2 மாலை நடை திறக்கிறது. மறுநாள் அதிகாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பூஜைகள் நடைபெறும். ஐப்பசி மாத பூஜையில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தவர்கள் நவ.3ல் தரிசனம் செய்யலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.


ஏற்கனவே முன்பதிவு செய்த கூப்பன், இரண்டு தடுப்பூசி அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழுடன் பக்தர்கள் வரவேண்டும். நவ. 3 நடை அடைக்கப்பட்ட பின் மண்டலகால பூஜைகளுக்காக நவ.15 மாலை நடை திறக்கப்படுகிறது. நவ.16-ல் மண்டலகாலம் ஆரம்பமாகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement